சிறுமியை துஷ்பிரயோகம் செய்த டியூஷன் ஆசிரியர் கைது

#Arrest #Sexual Abuse
Prathees
3 years ago
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த டியூஷன் ஆசிரியர் கைது

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் டியூஷன் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் சிறுமியை புத்தக அலுமாரிக்கு அனுப்பி வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டியூஷன் வகுப்பு முடிந்ததும் நடந்த சம்பவத்தை சிறுமி தனது தந்தையிடம் கூறியதையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரான ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி ஆசிரியரை கடுமையாக கீறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் பயிற்சி வகுப்பு ஆசிரியர் நீதிமன்ற மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை (1) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!