மோடிக்கு ஆவணம் அனுப்பிய கட்சிகள் நாளை ஊடக சந்திப்பு
Prabha Praneetha
3 years ago

இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் ஒப்பமிட்ட ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பில் மற்றுமொரு தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறாகப் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணியளவில் யாழ். நகரிலுள்ள யு.எஸ். விடுதியில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.



