கிளிநொச்சி வைத்தியசாலையில் பாரிய தீ கடும் சேதம்! photo

#Kilinochchi #Hospital
Nila
3 years ago
கிளிநொச்சி வைத்தியசாலையில் பாரிய தீ  கடும் சேதம்! photo

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20) பரவிய தீயினாலௌ பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து நேற்று (20) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு பரவிய பாரிய தீயை,  பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்ந்து இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில், குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என எமது செய்தியாளர் கூறுகின்றார்.
இந்த சம்பவத்தில் மார்பு நோய் சிகிச்சை நிலையம், பாலியல் நோய் சிகிச்சை நிலையம், பரிசோதனை அறை, களஞ்சிய அறை, வைத்தியர் சிகிச்சை அறை ஆகியன எரிந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!