19.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
19.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வாய்ப்பு இன்று கிடைக்கும்.
பரணி: மதியத்திற்கு மேல் நல்ல செய்தி கிடைத்து மகிழ்விக்கும்.
கார்த்திகை 1: நண்பர் ஒருவருக்கு உதவுவதற்கு செலவு செய்ய நேரிடும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: செலவு ஒன்றால் மகிழ்ச்சி வரும். ஆரோக்கியம் சிறக்கும்.
ரோகிணி: நண்பர்கள் மூலம் பணவரவு உண்டு. கவலை தீரும்.
மிருகசீரிடம் 1,2: சாதுர்யமாக செயல்பட்டு மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை: சிலருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
புனர்பூசம் 1,2,3: தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: 
புனர்பூசம் 4: மற்றவர் பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்கவும்.
பூசம்: சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும்
ஆயில்யம்: குடும்பத்தில் ஒற்றுமையும் குதுாகலமும் உண்டாகும்.

சிம்மம்: 
மகம்: உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும்.
பூரம்: பணியிடத்தில் நன்மை உண்டாகும். பங்குச்சந்தை லாபம் தரும்.
உத்திரம் 1: அதிகாரிகள் மூலம் நன்மை காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சகோதரர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
அஸ்தம்: வாழ்க்கைத்துணை மூலம் ஏற்பட்ட மனஅழுத்தம் குறையும்.
சித்திரை 1,2: மகனால் நன்மை காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உழைப்பு வெற்றி தரும்.
சுவாதி: வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வரும்.
விசாகம் 1,2,3: பேச்சில் கடுமை காட்டாமல் கவனமாக பேசுவது நல்லது.

விருச்சிகம்: 
விசாகம் 4: கூடுதலாக உழைத்தாலும் பாராட்டு பெற கால தாமதமாகும்.
அனுஷம்: சிறு சிறு சங்கடங்களும், வீண் செலவுகளும் இன்று முடிவுக்கு வரும்.
கேட்டை: முன்பு செய்த பயணங்களால் இன்றைக்கு ஆதாயம் உண்டாகும்.

தனுசு: 
மூலம்: வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
பூராடம்: பிறரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவேண்டாம்.
உத்திராடம் 1: பழி தரக்கூடிய தீய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உழைப்பால் அனுகூலம் உண்டாகும். சிறு தடைகள் இருக்கும்.
திருவோணம்: தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: எதிலும் தாமதப்போக்கு இருந்தாலும் மனம் தளர வேண்டாம்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: தந்தையின் புதிய முயற்சிகளுக்கு துணை நிற்பீர்கள்.
சதயம்: உங்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: தாய்மாமன் வழியில் ஆதாயம் ஒன்று உண்டாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4: புதிய கலையை கற்பீர்கள். நண்பருக்கு நன்மை வரும்.
உத்திரட்டாதி: எதிர்பாலினத்தவர் உங்களுக்கு உதவி செய்வார்.
ரேவதி: மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4