15.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
15.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைந்து வாழ்வில் முன்னேறுவீர்கள்.
பரணி: உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி வரும். நண்பர்களை சந்திப்பீர்கள்.
கார்த்திகை 1: மனதில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்க

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நிம்மதி நிறையும் நாள். நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.
ரோகிணி: கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத நபர் ஒருவர் உங்கள் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பார்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத நிகழ்வு நடந்து மகிழ்விக்கும்.
திருவாதிரை: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும்.
புனர்பூசம் 1,2,3: உங்களின் எண்ணம் நிறைவேறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

கடகம்: 
புனர்பூசம் 4: தொழில், வியாபாரம் சிறக்கும். நண்பர்களால் நன்மை உண்டு.
பூசம்: உங்களுக்காக அன்புக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம்: தன்னம்பிக்கை கொண்டோருக்கு இன்று தக்க பலன் கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: மேலதிகாரிகள் பரிவுடனும் கருணையுடனும் உங்களை அணுகுவர்.
பூரம்: உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிப்பதால் மனநிறைவு கூடும்.
உத்திரம் 1: உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உங்களின் உழைப்பு வீணாகாது.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நல்லவர்களுடன் நட்பு கொள்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.
அஸ்தம்: உங்களின் முன்னேற்றத்திற்கு தாயார் உறுதுணையாக இருப்பார்.
சித்திரை 1,2: பயந்து கொண்டிருந்த விஷயம் ஒன்று சுமுகமாக முடியும்.

துலாம்: 
சித்திரை 3,4: பணியாளர்கள் உழைப்பின் காரணமாக நலம் பெறுவீர்கள்.
சுவாதி: பணியிடத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மறுபடியும் கொடுக்கப்படும்.
விசாகம் 1,2,3: நல்லவர்களின் ஆதரவு நலம் சேர்க்கும். பணிவு கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: யாருடனும் கருத்து வேறுபாடின்றி இணங்கிப் போவது நல்லது.
அனுஷம்: பிறரிடம் அவசரமாகப் பேசிவிட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம்.
கேட்டை: குடும்பத்தினரின் நடவடிக்கையால் மகிழ்வீர்கள். அனுபவம் வெற்றி தரும்.

தனுசு: 
மூலம்: எதிர்பாராத நபர் ஒருவரிடமிருந்து தேவையான உதவி கிடைக்கும்.
பூராடம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முயலுங்கள்.
உத்திராடம் 1: வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்பம் விரிவாகும். கற்பனைக் கவலைகள் வேண்டாம்.
திருவோணம்: கணவன் மனைவி இடையே எதிர்காலத் திட்டம் உருவாகும்.
அவிட்டம் 1,2: பொருளாதார நிலை பற்றிய கவலை தீர புதிய வழி பிறக்கும்

கும்பம்: 
அவிட்டம் 3,4: புகழ்மிக்க ஒருவர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்.
சதயம்: நெருங்கிய ஒருவருடன் சந்திப்பு ஏற்பட்டு ஒற்றுமை பலப்படும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுத்த முயற்சியில் திடீர் வெற்றி கிடைக்கும்

மீனம்: 
பூரட்டாதி 4: திறமை உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி: சொத்து, வீடு வாங்கும் எண்ணம் கைகூடும்.
ரேவதி: யோகமான நாள். நீண்ட கால ஆசை ஒன்று நிறைவேறும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4