தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
#India
#School
#children
Mugunthan Mugunthan
3 years ago

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிப்பதால் கல்லூரிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிப்பதால் அனைத்து பொறியியல், இளங்கலை- அறிவியல், பாலிடெக்னிக் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உயர்க் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்திய செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.



