10.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
10.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: உங்களது திறமை, உழைப்பை பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.
பரணி: உறவினர்கள் தரும் ஆலோசனைகளை பின்பற்றுவது நல்லது.
கார்த்திகை 1: உங்களது பலவீனங்களை பட்டியலிட்டு மாற்றிக் கொள்வீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வாகனங்களைப் புதுப்பிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி: எந்தவொரு முக்கிய விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம்
மிருகசீரிடம் 1,2: சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவு எடுப்பீர்கள்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் நன்மை வரும்.
திருவாதிரை: சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணிச்சுமை கூடும்.
புனர்பூசம் 1,2,3: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சுபச்செலவு ஏற்படும்.
பூசம்: பேச்சு, செயலில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரியும்.
ஆயில்யம்: பயணங்களால் ஆதாயம் உண்டு. பரபரப்பான நாள்.

சிம்மம்: 
மகம்: சுபநிகழ்ச்சி ஒன்றை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் செல்வாக்கு கூடும்.
பூரம்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அன்பால் வெற்றி காண்பீர்கள்.
உத்திரம் 1: கூடுதல் உழைப்பால் நற்பலன் பெறுவீர்கள். கவலை தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அஸ்தம்: உங்களது வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.
சித்திரை 1,2: திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு.

துலாம்: 
சித்திரை 3,4: நீண்ட காலமாக பார்க்க நினைத்த ஒருவரை இன்று சந்திப்பீர்கள்.
சுவாதி: உழைத்தும் ஆதாயம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் தீரும்.
விசாகம் 1,2,3: பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உங்களது பிடிவாதத்தால் நெருக்கடி ஒன்றைச் சந்திக்க நேரிடும்.
அனுஷம்: யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கேட்டை: எதிர்காலம் பற்றி யோசித்து நல்ல முடிவு ஒன்றை எடுப்பீர்கள்.

தனுசு: 
மூலம்: பிறரது பிரச்னை ஒன்றைத் தீர்த்து வைத்து நிம்மதி அடைவீர்கள்.
பூராடம்: எந்தவொரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபவிஷயம் ஒன்று கூடி வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சிறிய வாய்ப்பாக இருந்தாலும் அதை பயன்படுத்துங்கள்.
திருவோணம்: புதிய நிறுவனத்திற்கு மாற அவசரம் காட்ட வேண்டாம்.
அவிட்டம் 1,2: மனசாட்சிக்கு விரோதமான செயல்கள் எதையும் செய்யமாட்டீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உற்சாகம் வரும்.
சதயம்: சோதனைகளையும் சாதனைகளாக்கி முன்னேறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: புதிய திட்டங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: கவலையில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: கவலையளித்த விஷயம் ஒன்று நல்லபடியாக முடிந்து நிம்மதி தரும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4