08.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
08.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நீங்கள் விரும்பிய செயல்கள் விரும்பியபடியே நடக்கக்கூடிய நாள்.
பரணி: எந்த முயற்சி எடுத்தாலும் முழுமையான வெற்றியைக் காணலாம்.
கார்த்திகை 1: இதுவரை தடைபட்டு வந்த விஷயங்கள் இன்று நடக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணிகளில் இருந்த அழுத்தங்கள் முற்றிலும் மாறும்.
ரோகிணி: ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: குழந்தைகளின் நிலையில் முன்னேற்றம் உண்டு.
திருவாதிரை: நல்லோரின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை உயரும்.
புனர்பூசம் 1,2,3: நண்பர் மூலம் முக்கியத் தேவை ஒன்று நிறைவடையும்.

கடகம்: 
புனர்பூசம் 4: மனம் மகிழும் சம்பவங்கள் நடந்து நிறைவளிக்கும்.
பூசம்: குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.
ஆயில்யம்: சொத்து தொடர்பான பிரச்னைகள் மிக எளிதாக தீரும்.

சிம்மம்:
மகம்: தொழில் தொடங்குவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
பூரம்: சிறு அளவிலான வியாபாரங்களை செய்வது பற்றிய திட்டம் வரும்.
உத்திரம் 1: புதிய வருமானத்திற்கான வழி வகை கிடைக்கும். கவலை தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பரபரப்பாக இயங்கி பல வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
அஸ்தம்: மனம் மகிழும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
சித்திரை 1,2: எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் சிறக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: நிதி வளர்ச்சி அமோகமாக இருக்கும். பரபரப்பான நாள்.
சுவாதி: சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும்..
விசாகம் 1,2,3: சிறிய அளவிலான முயற்சியிலேயே நற்பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நன்மைகள் நடக்கக்கூடிய நாள். தாயார் மகிழ்ச்சி அடைவார்.
அனுஷம்: நிதி வளர்ச்சி சிறக்கும். குடும்பத் தேவைகள் நிறைவடையும்.
கேட்டை: அதிகப்படியான வருமானம் ஈட்டக்கூடிய நாளாக இன்று இருக்கும்.

தனுசு: 
மூலம்: குடும்பத்தினரின் அனுசரணையை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.
பூராடம்: நண்பர் ஒருவரால் சிறிய அளவிலான ஆதாயம் உண்டு.
உத்திராடம் 1: அலுவலகப் பணியில் இருந்த பரபரப்பு குறைந்து நிம்மதி வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: யார் மீதும் அவசரப்பட்டு வழக்குத் தொடுக்க வேண்டாம்.
திருவோணம்: சகஊழியர்களின் வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டியதிருக்கும்.
அவிட்டம் 1,2: கூடுதலாக உழைத்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: சுறுசுறுப்பாக செயல்பட்டு நிலுவைப் பணிகளை செய்து முடிப்பீர்கள்.
சதயம்: லாபத்தை குறைத்து வியாபாரம் செய்ய வேண்டி வரும்.
பூரட்டாதி 1,2,3: வெற்றியை சந்திக்கக்கூடிய நாள். பணியில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவ செலவு வெகுவாக குறையும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.
ரேவதி: தாயாருக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலப் பிரச்னைகள் தீரும்
 

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4