06.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
06.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நல்ல ஆதாயங்களும், பாராட்டுகளும் கிடைத்து மகிழ்வீர்கள்.
பரணி: பெரியவர்களின் கருத்தை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடுதலாக கிடைக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வர்.
ரோகிணி: நல்ல திருப்பங்கள் உருவாகும். பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பயணம் செல்ல நேரிடலாம். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பழைய முதலீடு ஒன்று திடீர் லாபம் தரும்.
திருவாதிரை: பணவரவு அதிகரிக்கும். பங்குச் சந்தை லாபம் தரும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்களிடம் கவனமாகப் பேசுங்கள். தீய நட்பு வேண்டாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: பிறரது பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பூசம்: உங்கள் மீது வீண் பழிச்சொல் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிருங்கள்.
ஆயில்யம்: சுபச்செலவு உண்டு. உணவு விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்: 
மகம்: வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை
பூரம்: பணியாளர்கள் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் உதவியாக இருக்கும்.
உத்திரம் 1: உழைப்பு அதிகம் தேவைப்படும். அதன் பலன்களும் நன்றாக இருக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நல்லவர்கள் மூலமாக நடக்க வேண்டிய செயல் நிறைவேறும்.
அஸ்தம்: தாயாருக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்குவீர்கள். பரபரப்பு கூடும்.
சித்திரை 1,2: உங்களது வார்த்தைகள் மூலமாக நன்மையும் லாபமும் வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: யோகமான நாள். நண்பர்களுக்கு நன்மை செய்வீர்கள்.
சுவாதி: உடல் நலத்தில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.
விசாகம் 1,2,3: மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டு. சுப நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களது பேச்சில் நிதானம் வரும்.
அனுஷம்: யாரிடமும் கருத்து வேற்றுமை ஏற்படாமல் சமாளிப்பீர்கள்.
கேட்டை: துணிச்சல் காரணமாக எதிரிகளை வென்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு: 
மூலம்: உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
பூராடம்: குடும்பத்தினருடன் அதிகம் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.
உத்திராடம் 1: குழந்தைகளுக்கு திடீர் நன்மைகள் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பிறரிடம் இருந்து அன்பு வார்த்தைகள் கிடைக்கும். சந்தோஷம் கூடும்
திருவோணம்: வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம் 1,2: யாருக்கும் ஆலோசனை வழங்காதீர்கள். பேச்சில் கவனம் தேவை.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சதயம்: பணியாளர்கள் ஆயுதங்களை கையாளும் போது கவனமாக இருக்கவும்.
பூரட்டாதி 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுவார்த்தைகள் நன்கு முடியும்.

மீனம்: 
பூரட்டாதி 4: புதிய விஷயம் கற்பதற்காக நீங்கள் செய்யும் செலவு நன்மைக்கே.
உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த லாபம் நிதானமாகவே வரும். பொறுமை தேவை.
ரேவதி: உங்களால் நண்பர்களுக்கு நன்மை உண்டாகும். ஆரோக்யம் பற்றிய பயம் தீரும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4