சிரிக்க வைப்பவரை காதலியுங்கள் - காதல் விதிகள் - பாகம் - 2

சிரிக்க வைப்பவரை காதலியுங்கள் - காதல் விதிகள் - பாகம் - 2

சிரிக்க வைப்பவரை காதலியுங்கள்

சிரிப்பு தங்கத்துக்கு சமமானது . நகைசுவை உணர்வு ஓர் தனிப்பட்ட தகுதி . ஒரு சிலர் மற்றவர்களை விட நம்மை அதிகம் சிக்க வைப்பார்கள் . வேறு யாரையும் விட , உங்களை தைக்க சிக்க வைப்பவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் . அதுதான் என் அட்வைஸ் . நிச்சயம் அவரை உங்களுக்கு பிடிக்கும் . ஏனெனில் உங்களை சிரிக்க வைக்க கூடியவர் , நீங்கள் எதிர்பார்த்த மாதிரி தோற்றத்தில் கரமாக இல்லையென்றாலும் , கண்டிப்பாக ஈர்ப்புடையவராக இருப்பார்.

கொஞ்சம் என் சொந்த விஷயத்தையம் சொல்கிறேன் . கொஞ்சம் தான் . நான் என்னை எல்லோரையும் விட அதிகமாக சிரிக்க வைத்தவரை தான் திருமணம் செய்து கொண்டேன் . அது சரியான முடிவு என்று இன்றுவரை தோன்றுகிறது . நீங்கள் உங்களை சிரிக்க வைத்த இரண்டாம் அல்லது மூன்றாம் நபரை தேர்வு செய்ய கூடும் . ஆனால் , நகைசுவை உணர்வு உள்ளவரை மட்டும் விட்டுவிடாதீர்கள் . அது தாம் முதலில் முக்கியம் .

நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன் . பொதுவாக உங்களை சிரிக்க வைக்க கூடியவர் கிடைப்பாரானால் , அவர்தான் சிறப்பானவர் . அப்படி செய்யக்கூடியவரினால் , வாழ்க்கை மிகவும் சுலபமாக இருக்கும் .

என் நண்பர் ஒருவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார் . அவர் பேசும்போதும் தன்னை பற்றது தானே சிரித்து கொள்ள உதவிய தன மனைவி இப்போது இல்லாது போனது பெரிய இழப்பு என்றார். அவருடைய மனைவி இருக்கும்போது , இதை அவர் உணரவில்லை . அவருடைய மகிழ்ச்சிக்கு இது எவ்வளவு உபயோகமாக இருந்தது என்பதையும் அவர் உணரவில்லை .

இப்போதெல்லாம் தன்னை பற்றித்தான் அதிகம் யோசித்து , தலைவலியை அதிகப்படுத்திகொள்வதாகவும், இதையெல்லம் அவருடைய மனைவி இருந்திருந்தால் எல்லாவற்றையும் தூசு போல் தட்டி உதற வைத்திருப்பார் என்றும் கூறினார் .

அடுத்த முறை நீங்கள் பார்க்கும் நபருக்கு வாழைத்தண்டு கால்கள் , கவர்ச்சியான விழிகள் , அல்லது கொள்ளைகொள்ளும் புன்னகை எல்லாம் இருந்தால் , உடனே விழுந்துவிடாதீர்கள் . முதலில் உங்களை தொடாமல் உங்களை சிரிக்க வைக்கிறாரா என்று பாருங்கள் 

மேலும் வாழ்வியல் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.