04.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
04.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: மேலதிகாரியின் கடுமை மெல்ல மெல்ல மாறும்.
பரணி: குழப்பமான மனநிலை அகலுவதால் செயலில் தெளிவு வரும்.
கார்த்திகை 1: கூடுதல் முயற்சி காரணமாக நன்மைகள் நிகழும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: மனதிடம் அதிகரிக்கும். செயலில் உத்வேகம் பிறக்கும்.
ரோகிணி: உங்களது செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும்
மிருகசீரிடம் 1,2: வெற்றி வரும். திடீர் வரவு உண்டு. பயம் நீங்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: முன்யோசனையுடன் கவனமாக திட்டமிடுவது அவசியம்.
திருவாதிரை: யாரைப் பற்றியும் யாரிடமும் குறைகூற வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: வீட்டை புதுப்பித்து பலன் அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கடகம்: 
புனர்பூசம் 4: புதிய தம்பதிக்கு குழந்தைப்பேறு உறுதியாகும்.
பூசம்: நண்பர்கள் இடையே முன்பை விட ஒற்றுமை அதிகரிக்கும்.
ஆயில்யம்: நிலம், வீடு போன்றவற்றின் மூலம் வரவு உண்டு.

சிம்மம்: 
மகம்: புதிய நண்பர் கிடைப்பார். பணியிடத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
பூரம்: பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் வளம் பெறுவார்கள்.
உத்திரம் 1: சகபணியாளர்கள் இடையே நல்லுறவு ஏற்படுவதால் நிம்மதி வரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.
அஸ்தம்: அரசியல்வாதிகள் புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள்.
சித்திரை 1,2: சுணங்கிக் கிடந்த செயல்பாடுகளில் இன்று வேகம் அதிகரிக்கும்

துலாம்: 
சித்திரை 3,4: வீடு, மனை வாங்கும் திட்டம் நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.
சுவாதி: உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். புதிய விஷயங்கள் கற்பீர்கள்.
விசாகம் 1,2,3: பணியில் சிறப்பான முன்னேற்றத்தினை காண வழிபிறக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உங்களுக்கு உதவும் நண்பரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அனுஷம்: தொழிலில் லாபம் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
கேட்டை: உங்களது புதிய முயற்சிகளால் புகழ் அதிகரிக்கும்.

தனுசு: 
மூலம்: தேவையற்ற பயங்களால் நிம்மதி இழக்க வேண்டாம்.
பூராடம்: யாரையும் கடுமையாகப் பேச வேண்டாம். அதுவே நல்லது.
உத்திராடம் 1: உங்களின் செயல்பாடு காரணமாக மேன்மை அடைவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பணியாளர்கள் ஓய்வில்லாமல் கூடுதலாக உழைப்பீர்கள்.
திருவோணம்: குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் சிறப்படையும்.
அவிட்டம் 1,2: ஆடம்பர செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கூடிவர வாய்ப்பு உண்டு.
சதயம்: உறவினர்கள் பற்றி இருந்து வந்த மனவருத்தம் மறையும்
பூரட்டாதி 1,2,3: கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

மீனம்: 
பூரட்டாதி 4: எதிர்பாராத நபர் ஒருவர் மூலம் நன்மை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: அடுத்தவர்களின் தரம் அறிந்து மதிப்பளிப்பது நல்லது
ரேவதி: தாயாருக்கு நன்மை ஏற்படும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4