நாளை வெளிவரவுள்ள அறிவித்தல்! இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு
Mayoorikka
4 years ago
பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இரகசிய அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய பஸ் கட்டணக் கட்டமைப்பு நாளை போக்குவரத்து அமைச்சரினால் அறிவிக்கப்படும் என தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சாதாரண மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பஸ்களின் பயணக்கட்ட அதிகரிப்பு மக்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்குமா என்பது நாளை வெளியாகவுள்ள அறிவிப்பிலேயே தெரியவரும்.