காதல் விவகாரம்: தந்தை மற்றும் சித்தப்பாவால் தாக்குதலுக்குள்ளான சிறுமி மரணம்

#Death
Prathees
3 years ago
 காதல் விவகாரம்: தந்தை மற்றும் சித்தப்பாவால் தாக்குதலுக்குள்ளான சிறுமி மரணம்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்ட் டெம்பிள் பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சித்தப்பா நேற்று (21) அவரை தாக்கியுள்ளார்.

பின்னர் நேற்று காலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் நித்திரை கொய்யாமல் புலம்பி உள்ளார். சிறுமியின் தந்தை  தூங்க விடவில்லை எனக் கூறி  மீண்டும் சிறுமியைத்  தாக்கி உள்ளார்.

இதையடுத்து சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மயக்கமடைந்த சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை மவுண்ட் டெம்பிள் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!