கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை!
Prabha Praneetha
3 years ago

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவா்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் முதல்வா் தொடா்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.
தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவதும், அவா்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா் கதையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையாகவும் உள்ளது.



