ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு
Prabha Praneetha
3 years ago

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஒரே நாளில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரோன் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 569 நாட்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையாக பதிவாகி வருகிறது.
இந்நிலையில் ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வருவது சுகாதார அதிகாரிகளை பீதிக்குள்ளாக்கி வருகிறது.
பெப்ரவரி மாதம் ஒமிக்ரோன் உச்சத்தை அடையும் என்றும் இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒமிக்ரோன் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள். அவசர சிகிச்சைப் பிரிவுகள், சுவாசக் கருவிகள் போன்றவை தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.



