இந்தியாவுக்குத் தேவையெனில் கூடுதலாக ரஃபேல் விமானங்களை அனுப்பத் தயார் – பிரான்ஸ்

Prabha Praneetha
2 years ago
இந்தியாவுக்குத் தேவையெனில் கூடுதலாக ரஃபேல் விமானங்களை அனுப்பத் தயார் – பிரான்ஸ்

இந்தியாவுக்குத் தேவையெனில் கூடுதலாக ரஃபேல் விமானங்களை அனுப்பத் தயார் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பாதுகாப்பு வர்த்தகம் இந்தோ பசுபிக் பிரச்சினை உள்ளிட்டவை இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் பிரான்ஸ் இந்தியாவின் ஆதரவைக் கோரியுள்ளது.