அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் செல்லவுள்ளார்.

#India #Tamil Nadu #Prime Minister
அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் செல்லவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 12-ம் தேதி, விருதுநகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார் என்றும், அப்போது அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தெரிகிறது. பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

பிரதமரின் தமிழக பயணத்திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் தமிழகம் வருவது இதுவே முதன்முறை. இதற்கு முன் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 30ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர், தாராபுரத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு