பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு செல்லத் தயாராகும் லிட்ரோ காஸ் நிறுவனத் தலைவர்?

#Litro Gas
Prathees
4 years ago
 பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு செல்லத் தயாராகும் லிட்ரோ காஸ் நிறுவனத் தலைவர்?

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்நாட்டு எரிவாயுவின் தரம் குறித்து கேள்விக்குறியான சூழ்நிலையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் தொடர்ந்து ஊடகங்களைத் தவிர்த்து வருவதால் ஆளும் கட்சியினரால் அவர் மீது கடும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கேள்விக்குரிய சூழலுக்கு முகங்கொடுக்க முடியாத பட்சத்தில் லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் பதவி விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!