பொலிஸாரைக் கண்டு பதட்டத்தில் தப்பியோடியவர்களுக்கு நேர்ந்த கதி

#Colombo #Police
Prathees
2 years ago
பொலிஸாரைக் கண்டு பதட்டத்தில் தப்பியோடியவர்களுக்கு நேர்ந்த கதி

வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,  அதிகாரிகள் கடந்த 15ஆம் திகதி யூனியன் பிளேஸ் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பொலிஸ் அதிகாரிகளின் வருவதைக் கண்டதும்  கறுப்பு நிற காரில் இருந்த பலர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஆனால் அந்த கார்  நீண்ட தூரம் பயணம் செய்ய முடியவில்லை. பதட்டத்தில் சந்தேகநபர்கள் செலுத்திய கார்  முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளனர்.

பின்னர் அந்த கார் அன்றைய தினம் பிற்பகல் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகிலுள்ள வீதியில் பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வலையமைப்பைச் செயற்படுத்தும் பிரதான நபர் தெஹிவளையில் உள்ள வாலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு