அகில இந்திய மேயர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைக்கின்றார் பிரதமர் மோடி
Prabha Praneetha
3 years ago

உத்தரப்பிரதேசம்- வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார்.
இந்த மாநாட்டில் ‘புதிய நகர்ப்புற இந்தியா ‘ என்ற மையப்பொருளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த இருக்கின்றார்.
இதேவேளை நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசின் முக்கிய சாதனைகளை எடுத்துக்காட்டும் கண்காட்சி ஒன்றுக்கும் டிசம்பர் 17 முதல் 19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



