காதலனின் அலைபேசியைப் பார்த்து ஆற்றில் குதித்த காதலி-பயந்து ஓடிய காதலன்

#SriLanka
Nila
4 years ago
காதலனின் அலைபேசியைப்  பார்த்து ஆற்றில்  குதித்த காதலி-பயந்து ஓடிய காதலன்

கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மாணவியின் காதலன் என்ற சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 15 மாணவி  பேராதனை பாலத்திற்கு அருகில் மகாவலி ஆற்றில் குதித்ததாகவும்,  அச்சம் காரணமாக நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் தனது வீட்டிற்கு சென்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மகாவலி ஆற்றில் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போதும், மாணவி தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

கடந்த 9ம் திகதி மதியம் 2.30 மணியளவில் சிறுமியின் தந்தை மாணவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் மாணவி பள்ளியை விட்டு வெளியே வருவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

குறித்த மாணவி பேராதனை பல்கலைக்கழகத்தை அண்டியுள்ள  பாலத்தில் காதலனை சந்திப்பதற்காக பாடசாலைக்கு வெளியே வந்துள்ளார்.

இதன்போது காதலனின் தொலைபேசியில் மற்றொரு பெண் அனுப்பிய சில குறுஞ்செய்திகளைப் பார்த்து, அவள் பாலத்திலிருந்து குதித்தாள் என்று 
 இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞன் இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!