காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் யுவதி மீது துப்பாக்கிச்சூடு!

#Crime
Mayoorikka
4 years ago
காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் யுவதி மீது துப்பாக்கிச்சூடு!

தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமையால்  யுவதியின் மீது, இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி, வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, குறித்த  யுவதி சம்பவ இடத்திலே​யே உயிரிழந்துள்ளார்.

  பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய  பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமான குறித்த பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  இளைஞன், நெடுங்கேணி பொலிஸாரால் ஏற்கெனவே தண்டனைக்கு உட்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை பெற்றவர்.

தண்டனை காலம் நிறைவடைந்து கிராமத்துக்கு திரும்பிய அந்த இளைஞன், சமூகத்தினருடன் ஒத்திசைவான செயற்பாடுகளுக்கு குந்தகம் புரிந்துவந்துள்ளார். இதுதொடர்பில், கிராம மக்களும் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், சேனைப்பிலவில் வசிக்கும் 30 வயதான யுவதி ஒருவரிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திவந்துள்ளார்.  துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!