தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
Prabha Praneetha
3 years ago

தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 3ஆம் திகதி முதல், 6 தொடக்கம் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



