சபையில் கடும் மோதல்: ஆளுங்கட்சி உறுப்பினரின் தாக்குதலிற்கு உள்ளான தவிசாளர்
#Attack
Mayoorikka
3 years ago

மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் சபை அமர்வு இன்று (13) ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது மஸ்கெலியா நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, ஆளுங்கட்சியின் உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தாக்கப்பட்டதாக உப தவிசாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.



