இந்தியா ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல – ராகுல் காந்தி
Prabha Praneetha
3 years ago

இந்தியா ஹிந்துக்களின் நாடு, ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்திய அரசியலில் இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற இரண்டு உலகங்களுக்கு இடையே போட்டி உள்ளது.
நான் ஹிந்து. ஆனால் ஹிந்துத்வவாதி இல்லை. மஹாத்மா காந்தி ஹிந்து. ஆனால் கோட்சே ஹிந்துத்வவாதி. இந்தியா ஹிந்துக்களின் நாடு. ஹிந்துத்வவாதிகளின் நாடல்ல எனத் தெரிவித்துள்ளார்.



