முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்தவர்களின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
#Batticaloa
#CourtOrder
Prathees
4 years ago
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் இம்மாதம் 20 திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்குடா பொலிஸாரால் கடந்த மார்கழி 27ஆம் திகதி இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு நேற்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தால் மீண்டும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் 1 வருடங்கள் கடந்தும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே