மனைவி வெளியிட்ட கண்டனம்..பாகிஸ்தான் படுகொலைக்கு நீதி வேண்டும்

Keerthi
3 years ago
மனைவி வெளியிட்ட கண்டனம்..பாகிஸ்தான் படுகொலைக்கு நீதி வேண்டும்

மனைவி வெளியிட்ட கண்டனம். பாகிஸ்தான் படுகொலைக்கு நீதி வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களும்அதிரடி நடவடிக்கை.
பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட்ட  கணவரின் மரணத்திற்கு நீதியை பெற்றுத்தருமாறு  அரச தலைவர்களிடம் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது கணவர் கொலை செய்யப்பட்டதை ஊடகங்கள் ஊடாகவே அறிந்ததாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாக தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் நீதியை பெற்றுத்தருமாறும் அவர் கண்ணீருடன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலத்தை சிறிலங்காவிற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை மறுதினம் அவரது சடலம் சிறிலங்கன் விமான சேவை ஊடாக நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இதற்கான செலவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அவரது இறுதிச்சடங்கில் பல் ஆஆரசீயல் பிரமுகர்களும், இலங்கை இஸ்லாமிய தலைவர்களும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் பங்குகொள்வார்களென எதிர்பாற்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!