பசுவை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்- வெளியான அதிர்ச்சி காரணம்!

#world_news
Nila
4 years ago
பசுவை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்- வெளியான அதிர்ச்சி காரணம்!

கம்போடியாவில் பெண் ஒருவர் கணவனின் மறுபிறவி என நினைத்து பசுவை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏறப்டுத்தியுள்ளது.

Cambodia பகுதியில் வசிப்பவர் Khim Hang(74). இவருக்கு மறுபிறவியில் அதிகம் நம்பிக்கையை கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் செய்த விசித்திர செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்மணி மறைந்த தனது கணவர் பசுவாக மறுபிறவி எடுத்ததாக நினைத்து பசுவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதே சமயம் பசுவின் அனைத்து குணாதிசயங்களும் இறந்த கணவனைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அந்த பசுமாடு பிறந்ததில் இருந்தே அவரோடு அதிக நேரம் செலவழிப்பதாகவும் மாடு தன்னை நேசிப்பதாகவும் அந்த பெண் நம்புகிறார்.

அதனால் தான் அந்த பசுவை திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணின் மகன்களும், தங்களின் தந்தை தான் பசுவாக பிறந்து வந்துள்ளார் என்று நம்புகின்றனர்.

ஒருபோதும் பசுவை விற்றுவிட வேண்டாம் எனவும் அந்த பசுவுக்கு நன்றாக உணவளிக்க வேண்டும் என்றும் தனது மகன்களிடம் கூறியுள்ளார்.. இது தவிர பசு இறந்தால் மனிதனை போல் அதனை தகனம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!