விமானங்களுக்கு அவசரகால தடையை அறிமுகம் செய்த ஐரோப்பா
பெல்ஜியத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய திரிபு அடைந்த ஒமிகிரோன் என்று பெயரிடப்பட்ட வைரஸ் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அவசர தடையை அறிமுகம் செய்யும் என்று ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த புதிய ஒமிகுரோன் வைரஸ் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங் கொங் ஆகிய பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இதை ஒரு கவலை தரும் விடயமாக இந்த பிறழ்வு பெற்ற வைரஸை பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் 27 சுகாதார துறை தலைவர்களும் இணைந்து இவ்வாறு தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த தடையானது போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு பொருந்தும்.
உலக சுகாதார அமைப்பின் ஆரம்பகட்ட ஆய்வுகளின் படி இந்த வைரஸ் மற்றைய வைரசுகளை விட தீவிரமாக மீள்பரவும் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளது.
நிபுணர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில் முதலில் வுஹனில் அடையாளம் காணப்பட்ட வைரஸை விட இது பாரிய அளவில் பிறழ்வு ஏற்பட்ட வைரஸாக காணப்படுவதால் கோவிட் தடுப்பு மருந்துகள் இதற்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்று தெரிவித்தனர்.