புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு ஏற்றிவந்த கப்பல் கவிழ்ந்து 27பேர் உயிரிழப்பு
பிரித்தானியா நோக்கி பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலய்ஸ் கால்வாய்க்கு அருகில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்;துள்ளது.
மிக மோசமான விபத்து இதுவென பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை பிரித்தானியாவும் பிரான்ஸம் இணைந்து மேற்கொள்கின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் என பிரான்ஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
24 பேரின் உடல்கள் டர்ன்க்கேர்க கரையோரத்தில் ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்த சரியான எண்ணிக்கையை எவரும் வெளியிடவில்லை.
குளிர் காலம் தொடங்குவதால் கடல் கொந்தளிப்பு அதிகமாகவே இருக்கும்.நீரின் தன்மை அடர்;த்தியாகவும் குளிர்மையாகவும் காணப்படும்.இதனால் மிக மோசமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறிய படகொன்றில் அதிகளவானவர்கள் பிரித்தானியாவை சென்றடைய முற்பட்டுள்ளனர்.
இவ்வாறு இன்றைய தினம் மாத்திரம் 25 படகுகள் பிரித்தானியாவை அடைய முற்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.