மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

Keerthi
4 years ago
மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009-ல் சிங்கப்பூருக்கு 'ஹெராயின்' என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.

வருகின்ற புதன்கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் கொரோனா தொற்று உறுதியானதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது 33 வயதான நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை இப்போதைக்கு நிறுத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!