சுவிஸ்லாந்தில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#Corona Virus
Keerthi
4 years ago
சுவிஸ்லாந்தில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 223பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 43ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் இதுவரை 11ஆயிரத்து 322பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 150பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 50ஆயிரத்து 225பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 118பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்து 39ஆயிரத்து 676பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!