பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 94இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
#UnitedKingdom
Keerthi
4 years ago
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 94இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக, 94இலட்சத்து 6,001பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 42ஆயிரத்து 338பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 39ஆயிரத்து 329பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 214பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 63ஆயிரத்து 641பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 23பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.