பிரதமர் மோடி போப் ஆண்டவரை சந்தித்ததன் நோக்கம்!!?
Prabha Praneetha
3 years ago

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாட்டு பிரதமர் மற்றும் அதிபர்களுடன் பேசி அந்நாட்டுடன் நட்புறவு கொள்வார் . .
தற்போது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோரைச் சந்தித்தார்.
இதையடுத்து, இன்று வாட்டிகன் சென்றுள்ள பிரதமர் மோடி போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்துப் பேசினார்.
ஏற்கனவே 20 நிமிடங்களுக்கு திட்டமிருந்த இந்த சந்திப்பு திட்டமிருந்த நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக சுமார் 1 மணிநேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.



