ஹிந்து மதத்திற்கு மாறிய இந்தோனேஷியா அதிபரின் மகள்

#Hindu
Keerthi
3 years ago
ஹிந்து மதத்திற்கு மாறிய இந்தோனேஷியா  அதிபரின் மகள்

இஸ்லாம் மதம் தழைத்தோங்கி இருக்கும் இந்தோனேசியா நாட்டின் முதல் அதிபர் சுகர்னோ. இவரது மூன்றாவது மனைவிக்கு பிறந்த மகள் சுக்மாவதி. இவர் இந்து மதத்திற்கு மாற இருப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

அதன்படி அவர் நேற்று தனது 70-ஆவது பிறந்தநாளில் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். 'சுதி வதனி' என்ற பெயரில் பாலியில் நடந்த மதம் மாறும் நிகழ்ச்சியில் அவர் இந்து மதத்திற்கு மாறினார். இந்து மதம் பாலினீஸ் மக்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது என சுக்மாவதி கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை விமர்சித்து சுக்மாவதி கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவருக்கு எதிராக இஸ்லாமிய குழுக்கள் போராட்டத்தை முன்னெடுத்தன.

இதனையடுத்து, 'இந்தோனேசியாவின் அனைத்து இஸ்லாமியர்களிடமும், குறிப்பாக கவிதையால் மனது புண்பட்டவர்களிடமும் என் மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று சுக்மாவதி கூறினார். ஆனால், இந்தோனேசிய உலமா பாதுகாப்பு அணியினர் (TPUI) மற்றும் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினர் (GMII) அவரது மன்னிப்பை ஏற்க மறுத்து, சுக்மாவதி எழுதிய கவிதைக்காக அவர் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டுமென கூறினர்.

இதனால் சுக்மாவதி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்தே சுக்மாவதி சுகர்னோபுத்திரி இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!