சுவிற்சலாந்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை குறையவில்லை!
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் ஒக்டோபர் 21ம் திகதி நடந்து முடிந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றுக்காரணமாக ஒருவர் இறந்துள்ளார்.
சுவிற்சலாந்தில் தினசரி கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை குறையாது காணப்படுகிறது. ஒக்டோபர் தொடக்கத்தில் புதிய தொற்றுக்களின் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. தினசரி பதிவாகும் தொற்றுக்களின் எண்ணிக்கை 1000க்கு கீழ் உள்ளது.
எவ்வாறாயினும் இந்த வாரம் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் 1300 தொற்றுக்களைத்தாண்டியது.
பெடரல் ஒபிஸ் அப் பப்ளிக் ஹெல்த் இன் அட்டவணைப்படி அப்பென்சல் இன்னர்ஹோட்டன் மற்றும் ஒப்வால்டனில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் 14 சுவிஸ் கன்டோன்களில் நோய்தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.



