அரிய பொது அறிவுத் தகவல்கள்

Keerthi
2 years ago
அரிய பொது அறிவுத் தகவல்கள்

1. வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

2. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

3. சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

4. பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.

5. `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

6. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

7. `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

8. சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

9. `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.

10.  சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

11. `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.

12.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.

13.  முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

14.  `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.

15.  பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

16.  குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

17.  இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

18.  பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

19.  முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

20.  `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.