கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவி.. இதுவும் காதல் தான் !!

Keerthi
3 years ago
கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவி.. இதுவும் காதல் தான் !!

உயிரிழந்த தனது கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயது பெண்மணி கேசி. இவர் 2009 ஆம் ஆண்டு சீயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கணவர் சீயன் ஆஸ்துமா பாதிக்கப்பட்டார். இதனால் உரிய சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார்.

இதனால் அவரது மனைவி கேசி பெரும் சோகம் அடைந்தார். மேலும் மன வேதனைக்கு உள்ளான கேசி தான் செல்லும் இடமெல்லாம் கணவரின் அஸ்தியை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். கணவரின் அஸ்தியை விரலால் தொட்டு சாப்பிட்டும் வருகிறார். இது குறித்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு பலரும் இது தொடர்பாக அவரிடம் கேள்வியை முன்வைத்தனர். ஆனால், கணவரின் அஸ்தியை சாப்பிடும் பழக்கத்தை தன்னால் நிறுத்த முடியாது எனவும் கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!