உலக தரவு மன்றம் பெர்னில் நிகழ்கின்றது....
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் பெர்னில் உலக தரவு மன்றத்தின் தொடக்கத்தில் நிலையான வளர்ச்சிக்கான நம்பகமான தரவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் உலகத்தரவு மன்றத்தின் மூன்றாவது பதிப்பு சுவிஸ் கூட்டாட்சி தலைநகரில் ஒக்டோபர் 3-6 வரை நடைபெறுகிறது.
இதன் இலக்கானது தரவு சால்களைச் சமாளிப்பதை நோக்காக கொண்டு இதில் யாரையும் விட்டுவிடாதீர்கள் மற்றும் தரவு மூலம் உலகைப் புரிந்து கொள்வது பற்றி ஆராயப்படும்.
ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் சுவிஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வமர்வில் 110 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 பேர் ஒன்றிணைகின்றனர். இதில் சிலர் நேரிலும் மற்றும் சிலர் ஒன்லைனிலும் கலந்துகொள்கிறார்கள்.



