மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது சஜித்தின் கருத்துக்கு அரசு பதில்
#SriLanka
Yuga
3 years ago

"இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த முடியாது."
இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அண்மையில் வெளியிட்ட அறிக்கைக் குறித்து தம்புள்ளையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
தேவையாயின் எதிர்க்கட்சி தலைவர், அவருக்கென்று தனியாக ஒரு தேர்தலை நடத்திக்கொள்ளட்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



