சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து இராணுவத் தளபதி விளக்கம்

15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி தொடங்குவது குறித்து ஜனாதிபதி இந்த வாரம் அறிவுறுத்தல்களை வழங்குவார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கதிர்காமத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும்போதே ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
பல்வேறு வியாதிகள் மற்றும் சிக்கல்கள் உள்ள 12 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட்ட உடனேயே 15 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதன்படிஇ இந்த தடுப்பூசியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை இந்த வாரம் ஜனாதிபதி அறிவுறுத்துவார்.
தற்போதைய அறிவுறுத்தல்களின்படி, ஒக்டோபர் 15 வரை பேரணி நடத்த மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது. அந்த நிலை தொடர்கிறது. ஒக்டோபர் 15 க்குப் பிறகு இந்த நிலைமை தவிர்க்கப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் தெரிரவித்தார்.



