சதோசயில் இடம்பெற்ற மற்றொரு மோசடி குறித்து சிஐடி விசாரணை
#Investigation
Prathees
4 years ago
சதோச விற்பனை நிலையத்தில் பூண்டு மோசடி போன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் களவாக விற்பனை செய்ததாக மற்றொரு மோசடி தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு சிஐடியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது பேலியகொட பொலிஸ் விசாரணைக் குழுக்கள் இந்த அனைத்து விஷயங்களையும் விசாரிப்பது கடினம் என்பதால் மோசடி குறித்து சிஐடியினரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை, பூண்டு மோசடிக்கு மேலதிகமாக ஏனைய மோசடிகள் பற்றிய தகவல்களும் கிடைப்பதால் அதனை சிஐடியிடம் ஒப்படைத்ததாக பேலியகொட பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்