அமெரிக்க நிறுவனமான பிடபிள்யுசி மூலம் வீட்டில் இருந்தவாறே தொழில் புரியலாம்.
#world_news
#United_States
Mugunthan Mugunthan
4 years ago
அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்தவாறு வேலைசெய்யக்கூடியவாறான தொழில்வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பெரும் பாலும் இவை இணையம் வழியாக செய்யக்கூடியவையாக உள்ளது. இவ்வாறான ஒரு நிறுவனம் தான் PWC.
கணக்குகளை பராமரிக்க மற்றும் ஆலோசனை வழங்கும் அமெரிக்க நிறுவனமான பி டபிள்யு சி (PWC) இனிமேல் ஊழியர்கள் வேலை பார்ப்பதற்கு அலுவலகம் வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்ட அந்நிறுவனம்,ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டால் அல்லது சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அதற்கு உதவி செய்வோம். மேலும் ஊழியர்கள் வசிக்கும் இடங்களை பொறுத்து அவர்களின் சம்பளம் சற்று குறைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.