05 மாதங்களுக்கு பிறகு பெண் கொலை வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி

#Murder
Prasu
3 years ago
05  மாதங்களுக்கு பிறகு பெண் கொலை வழக்கில்  கைதான போலீஸ் அதிகாரி

5 மாதங்களுக்கு பிறகு இளம்பெண் மரணத்தில் குற்றவாளி கைதாகி உள்ளார்.. இந்த வழக்கின் தீர்ப்பு லண்டனில் பரபரப்பை கிளப்பி வருகிறது

தெற்கு லண்டனில் பிரிஸ்டன் பகுதியில் வசித்து வந்தவர் சாரா... 33 வயதாகிறது.. மார்க்கெட்டிங் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி மாலை, நண்பரை சந்திக்க சென்றார்.பிறகு அன்று இரவு 9 மணியளவில் நண்பரை சந்தித்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினார்.. வரும் வழியில் எல்லாம், அதே நண்பருடன் செல்போனில் பேசி கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்..

அப்போது திடீரென செல்போனில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.. அவ்வளவு நேரம் நன்றாக பேசி கொண்டிருந்த நிலையில், இணைப்பு ஏன் திடீரென துண்டிக்கப்பட வேண்டும்? சாராவிற்கு என்ன ஆச்சோ என்று அந்தநண்பர் அதிர்ச்சி அடைந்து, கடைசியில் போலீசில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கினர்.

சோஷியல் மீடியாக்களிலும் சாரா மாயமானது பகிரப்பட்டது.. இதனால் அந்த நகரமெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. எங்கெங்கோ தேடியலைந்த நிலையில், ஒரு வாரம் கழித்துதான் சாராவின் சடலம் கிடைத்தது.. அவர் காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள கென்ட் நகருக்கு அருகே சாரா பிணமாக கிடந்தார்.. அது ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி

அங்கிருந்த குளத்தில் சாராவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்போதுதான் வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.. சாரா காணாமல் போன இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை முதலில் ஆய்வு செய்தனர்.. அப்போது, வேன் கூசன்ஸ் என்பவர்தான் இதில் சம்பந்தப்பட்டவர் என்பதை பார்த்து போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்..

காரணம், அவரும் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார்.. 48 வயதாகிறது. சிசிடிவி காட்சியின் ஆதாரத்தை வைத்து, சாரா பற்றி கேட்டதற்கு, உண்மையை ஒப்புக் கொண்டார்.. சாராவை கொலை செய்ததையும் போலீசாரிடம் சொல்லிவிட்டார்.. பின்னர் அதிகாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.. வழக்கை விசாரித்த நீதிபதி, கூசன்ஸுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.. கடந்த 5 மாதமாகவே இந்த கொலை பெரும் பரபரப்பை கிளப்பியது..

சாராவுக்கு என்ன ஆச்சு? என்று சோஷியல் மீடியாவில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி கொண்டே உறவினர்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே இருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!