ஊழியர்கள் அலுவலகத்திற்கே வரவேண்டிய அவசியம் இல்லை: அமெரிக்கா நிறுவனம் அறிவிப்பு
#United_States
Prasu
3 years ago

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அனுமதித்தன. ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலம் நடத்தின.
இதனால் அலுவலக பராமரிப்பு, மின்சாரம் போன்ற செலவுகள் அலுவலகத்திற்கு மிச்சமாகின. சில நிறுவனங்கள் இதுவரை ஊழியர்களை அலுவலத்திற்கு அழைக்காமல் உள்ளது.
இந்த நிலையில் கணக்குகளை பராமரிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் அமெரிக்க நிறுவனம் பி.டபிள்யூ.சி. (PwC) இனிமேல் ஊழியர் வேலைப்பார்ப்பதற்காக அலுவலகம் வரவேண்டாம், வீட்டில் இருந்தே பணிபுரியலாம் எனத் தெரிவித்துள்ளது



