பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சாரக்கோசிக்கு கடுங்காவற் சிறைத்தண்டனை!!

தேர்தற் பிரச்சாரத்தின் போது கட்டுப்பாட்டிற்குரிய தொகையினைத் தாண்டிப் பெரும் தொகைப் பணம் செலவிட்டமை தொடர்பாக பிக்மலியோன் விவகாரத்தில் (AFFAIRE BYGMALION) இன்று முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்குத் ஒரு வருடக் கடுங்காவற் தண்டனை விதிக்கப்பட்டுதுள்ளது.
இவரின் மீதுபெரும் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கிற்கு மட்டும் இன்று தீர்ப்பு பரிசின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வருடக் கடுங்காவற் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் தொடர்புடைய மற்றவர்களிற்கு இரண்டரை வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாங்கள் உடனடியாக மேன்முறையீடு செய்யப்போவதாக நிக்கோலா சாக்கோசியும் அவரது வக்கீலும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடாபியிடம் பெருந்தொகையான பணத்தைத் தேர்தலிற்காக நிக்கோலா சார்க்கோசி பெற்ற பெரும் வழக்கும் நிலுவையில் உள்ளமை குறிப்படத்தக்கது.



