அமெரிக்கா, சுவிஸ் நிதிநிறுவனம் மீது புகார்.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவியதாக சுவிட்சர்லாந்து நிதிநிறுவனம் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
ஆறு நபர்களும் சுவிட்சர்லாந்து தனியார் நிறுவனமொன்றும் தமது நாட்டுப் பிரஜைகள் வரி ஏய்ப்பில் ஈடுபட உடந்தையாக செயற்பட்டதாக அமெரிக்கா வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் வழியாக சுவிட்சர்லாந்து வங்கியின் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மூன்று அமெரிக்கர்கள் இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தனியார் வங்கியான IHAG வங்கியின் மூலம் அமெரிக்கர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இந்த வங்கி மீது அமெரிக்கா வழக்குத் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.