வீட்டில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!
#SriLanka
#Death
#Women
Yuga
3 years ago

பசறை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பசறை வீதி, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



