அடுத்த வாரம் சுவிஸ்க்கு வரவுள்ள ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகள்

ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்தில் தயாரிப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துவரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரமளவில் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்துக்கு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஃபெடரல் கவுன்சில் ஒரு சிறிய அளவிலான தடுப்பூசிகளை எதிர்வரும் ஒக்டோபர் 5ம்திகதிக்குள் அனுப்பவுள்ளது.
அதற்கமைய, சுமார் 150 000 டோஸ் ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்துக்கு வரவுள்ளன.
இவ்வாறு கிடைக்கப்பெறும் 150 000 தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் மாநிலத்திலும் வசிக்கும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படுகிறது.
சூரிச்சிற்கு 26000 டோஸ்களும், அதைத் தொடர்ந்து பேர்ண் மாநிலத்திற்கு 18,000, மற்றும் வவுட் 14,000, ஆறோவுக்கு 12,000 டோஸ், செங்காளனிற்கு 9,000, ஜெனீவாவுக்கு 8,000 மற்றும் டிசினோசுக்கு 6,000 டோஸ் என டோஸ்கள் பகிர்ந்தளிப்ப்தற்கு கணக்கிடப்பட்டுள்ளன..



