அமெரிக்க பத்திரிகையாளர்களை விட இந்திய பத்திரிரகையாளர் சிறப்பு - ஜோ பைடன்

#world_news
அமெரிக்க பத்திரிகையாளர்களை விட இந்திய பத்திரிரகையாளர் சிறப்பு - ஜோ பைடன்

அமெரிக்க பத்திரிகையாளர்களை விட, இந்திய பத்திரிகையாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதை அடுத்து, அந்நாட்டு பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 'அமெரிக்க பத்திரிகையாளர்களை விட, இந்திய பத்திரிகையாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. வேறு நாட்டு பிரதமர் முன்னிலையில் தொடர்பில்லாத கேள்விகளை அமெரிக்க பத்திரிகையாளர்கள் கேட்டனர்' என, அதிபர் பைடன் தெரிவித்தார்.

இந்த கருத்து அமெரிக்க பத்திரிகையாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதையடுத்து அந்நாட்டு ஊடகத்தினரை அழைத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலர் ஜென் சாக்கிஅமெரிக்க செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சரமாரியாக கேள்விகள் முன்வைக்கப் பட்டன.அதற்கு ஜென் சாக்கி அளித்த பதில்:அமெரிக்க பத்திரிகையாளர்கள் சூழ்நிலைக்கு தக்க கேள்விகளை கேட்கவில்லை என்பதை தான் அதிபர் அவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என நினைக்கிறேன்.

கொரோனா தடுப்பூசி குறித்து அதிபர் பேச நினைத்துள்ளார். ஒரு சிலர் அது குறித்த கேள்விகளை கேட்டீர்கள். பலர், தொடர்பில்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தனர்.அன்றைய தினத்திற்கு தொடர்பில்லாத கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மற்றபடி அமெரிக்க செய்தியாளர்களை அதிபர் குறைத்து மதிப்பிடவில்லை.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!